Mnadu News

தனது மனைவிக்காக ஆஜரான பெண் வழக்கறிஞரை தாக்கிய நபர் கைது

மதுரையை சேர்ந்த ஆதி சுகன்யா என்பவருக்கும் அவரது கணவர் கார்த்திக் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக மதுரை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அந்த புகார் சம்பந்தமாக மதுரை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக ஆதி சுகன்யா மற்றும் அவரது கணவர் கார்த்திக் இருவரும் இன்று ஆஜராகி உள்ளனர். விசாரணைக்கு பின்னர் வெளியே சென்ற கார்த்திக் வழக்கறிஞர் நீதி மலரை ஆபாச வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் கைகலப்பு ஏற்பட்டு காயமடைந்த வழக்கறிஞர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கார்த்திக் மீது நான்கு வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் வழக்கறிஞர் நீதி மலர் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends