சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா மல்லாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மல்லாக்கோட்டை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சந்தி வீரன் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நடைபெற உள்ள ஆனி மாத திருவிழாவில் யாருக்கும் முதல் மரியாதை வழங்க கூடாது எனவும், அனைத்துச் சமூகத்தினரையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தனிப்பட்ட நபர்களுக்கு கோயில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்கக்கூடாது. அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மக்களும் திருவிழாவில் வழிபடுவதை இந்து அறநிலையத் துறை உறுதி செய்ய வேண்டும். இதனை அருள்மிகு ஸ்ரீ சாந்தி வீரன் சுவாமி கோயில் தக்கார் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More