டான் பட பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் பெரிதும் எதிர்பார்த்த படம் ” பிரின்ஸ்”. அனூதீப் இயக்கத்தில் வெளியாகி சுமாரான வெற்றியைப் பதிவு செய்து பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது.
இதனால் இனி கதை தேர்வில் கவனமாக இருக்க போகிறார் சிவா என்கிற தகவல் பரவிய நிலையில், அதே போல ரீலீஸ் தேதி விவகாரத்திலும் இனி உஷாராக செயல்படப் போகிறார் சிவா என்ற தகவல் கசிந்துள்ளது.
அதாவது பிரின்ஸ் பட தோல்விக்கு பிறகு இனி போட்டியின்றி சிங்கிள் படமாக தமது படத்தை வெளியிட போவதாக சொல்லப்படுகிறது. அப்படி ரவி குமார் இயக்கத்தில் சிவா நடித்து வரும் படம் “அயலான்”.
இந்த படம் இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில், அடுத்த வருடம் மார்ச் மாதம் இறுதியில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.