Mnadu News

தனுஷ் 50 இல் இணைந்த தேசிய விருது பட நடிகை! யார் தெரியுமா? 

நடிகர் தனுஷ் : 

20 வருடங்களாக தமது அயராத உழைப்பால் இந்த இடத்துக்கு வந்துள்ளார் தனுஷ். எத்தனையோ வித சறுக்கல்கள் அவர் வாழ்வில் இருந்தாலும், அதை எல்லாம் புறம் தள்ளி விட்டு படத்துக்கு படம் மிரட்டி வருகிறார். 

தனுஷின் அடுத்தடுத்த நகர்வுகள்: 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தற்போது “கேப்டின் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து, மாரி செல்வராஜ், சேகர் கம்முலா, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் என இவை தொடர்ச்சியாக தனுஷ் நடிப்பில் உருவாக உள்ளன. இதே போல ஆயிரத்தில் ஒருவன் 2, வட சென்னை 2 போன்ற இன்னும் சில படங்களும் உள்ளன. 

தனுஷின் கனவு படமான 50 வது படம் : 

“பவர் பாண்டி” படத்துக்கு பிறகு தனுஷ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாக உள்ளது “தனுஷ் 50”. இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிக்கவுள்ளனர் என்பது உறுதியான நிலையில், அதே போல, இப்படத்தில் தனுஷுக்கு அண்ணனாக எஸ்.ஜே.சூர்யாவும், தம்பியாக சந்தீப் கிஷனும் நடிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்தது. அதுவும் தற்போது பெரும்பாலும் உறுதி ஆகி உள்ளது. 

தனுஷ் 50 இல் அபர்ணா பாலமுரளி:  

சர்வம் தாள மயம், சூரரரை போற்று படங்களின் மூலம் நல்ல நடிகை என்ற பெயரையும், சரியான படங்களை தேர்வு செய்து நடிக்கும் நற்பெயரையும் பெற்றார் அபர்ணா பாலமுரளி. தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் சரியான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி, தற்போது அவர் ஓகே செய்துள்ள படம் “தனுஷ் 50”. இது உறுதி ஆகி உள்ளது. இந்த படத்துக்காக அவருக்கு ஒரு பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடதக்கது. 

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More