Mnadu News

தன்னைத் தானே ஓவியம் எனப் புகழும் நடிகை தமன்னா: 3 லட்சம் லைக்குகள் பெற்று வைரல்.

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தமன்னா, தனு{டன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். தற்போது போலா ஷங்கர், ஜெயிலர், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய படங்கள் வெளிவர உள்ளது.இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தமன்னா பதிவிட்ட பதிவில், “என்னை வெறுப்பவர்கள் வேண்டுமானால் இதை ஓவியம் அல்ல என்பார்கள்” என ஜாலியாக அவரையே ஓவியமென புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.இந்த புதிய புகைப்படங்கள் 3 மணி நேரத்தில் 3 இலட்சத்திற்கும் அதிகமாக லைக்குகள் பெற்று வைரல் ஆகியுள்ளது.

Share this post with your friends