Mnadu News

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அனல் காற்றின் தாக்கம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends