பல்வேறு மாநிலங்களுக்கு வரி பகிர்வின் 3-வது தவணையாக மத்திய அரசு ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 280 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.அதில், தமிழகத்திற்கான வரி பகிர்வாக 4 ஆயிரத்து 825 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.வழக்கமாக மாதாந்திர தவணையாக 59 ஆயிரத்து 140 கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்கப்படும் நிலையில், முன்கூட்டியே கூடுதல் தவணையையை மத்திய அரசு விடுவித்துள்ளது. மாநிலங்களின் மூலதன மற்றும் வளர்ச்சி செலவினங்களை வேகப்படுத்தி, மாநிலங்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உறுதியின் அடிப்படையில் இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று...
Read More