மூல தன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கு சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் 16 மாநிலங்களுக்கு மத்திய அரசு 56 ஆயிரத்து 415 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அதில் தமிழகத்திற்கு 4 ஆயிரத்து 79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
- தமிழகத்துக்கு ரூ.4,079 கோடியும்,
- பீஹாருக்கு ரூ.9,640 கோடியும்,
- மேற்குவங்கத்திற்கு ரூ.7,523 கோடியும்,
- அருணாச்சல் பிரதேசத்துக்கு ரூ.1,255 கோடியும்
- சத்தீஸ்கருக்கு ரூ.3,195 கோடியும்,
- கோவாவுக்கு ரூ.386 கோடியும்,
- குஜராத்துக்கு ரூ.3,478 கோடியும்,
- அரியனாவுக்கு ரூ.1,093 கோடியும்,
- ஹிமாச்சல் பிரதேசத்துக்கு ரூ.826 கோடியும்,
- கர்நாடகாவுக்கு ரூ.3,647 கோடியும்,
- மத்திய பிரதேசத்துக்கு ரூ.7,850 கோடியும்,
- மிசோரத்துக்கு ரூ.399 கோடியும்,
13.ஒடிசாவுக்கு ரூ,4,528 கோடியும், - ராஜஸ்தானுக்கு ரூ. 6,026 கோடியும்,
- சிக்கிம்- க்கு ரூ.388 கோடியும்,
- தெலுங்கானாவுக்கு ரூ.2,102 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதோடு, சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம், நீர் வழங்கல், மின்சாரம், சாலைகள், பாலங்கள் மற்றும் ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மூலதன முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.