நாகர்கோவிலில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைத்துப் பேசிய மு.க. ஸ்டாலின் நாட்டை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். சாதி கலவரம், மதக் கலவரத்தை ஏற்படுத்த சதி நடக்கிறது என்றும் திமுக ஆட்சியை அகற்றுவதற்காக கலவரத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள் என்றும் கூறினார்;.தொடர்ந்து முதல் அமைச்சர் கூறியதாவது, தமிழகத்தை பிளவுபடுத்த நினைப்பவர்கள் திமுக ஆட்சி மீது புழுதிவாரி தூற்றுகிறார்கள். தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் நம் மீது விமரிசனத்தை வைக்கிறார்கள். பிரச்னைகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, திமுகவினர் கௌரவம் பார்க்காமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தலாமா என்ற நோக்கில் சிலர் சதி செய்து வருகின்றனர் என்றும் நாகர்கோவிலில் முதல் அமைச்சர்; ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More