சென்னை கமலாலயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக ஒருபோதும் தலையிடாது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்கிறது. இந்தக் கூட்டணிக்கு தேசியத் தலைமை பாஜக தான். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பல கட்சிகள் வர வாய்ப்புள்ளன.
தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு தான் கூட்டணி இறுதி வடிவம் பெறும். தமிழகத்தில் முதல் கட்சியாக வருவதே பாஜகவின் இலக்கு.
உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளதால் அவரை அமைச்சர் ஆக்கியுள்ளனர். இதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது போகப் போகத் தெரியும். அவருக்கு தனிப்பட்ட முறையில் எனது வாழ்த்துகள்.
கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது, இயற்கை வளம் கேரளத்துக்கு கடத்தப்படுவது குறித்து கன்னியாகுமரி மாவட்ட மக்கள் ஜாதி, மொழி, மத வேறுபாடுகளை மறந்து விரைவில் போராட்டம் நடத்தும் சூழல் உருவாகும்.
ஆன்லைன் சூதாட்ட மசோதா பற்றி தமிழக அரசு பேசுவதற்கு முன்பு, பள்ளிகள் அருகே கஞ்சா, பான்பராக் உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் ஆளுநர் தெளிவான முடிவு எடுப்பார் என்றார். பேட்டியின்போது, சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More