தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி, தர்மபுரி, திருச்சி ஆகிய அரசு மருத்துவ கல்லூரிகள் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றாததால் இந்தாண்டுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்தது. உடனடியாக குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு ஆணையத்திற்கு அரசு தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து ஸ்டான்லி, தர்மபுரி ஆகிய மருத்துவ கல்லூரிகளுக்கு ஐந்தாண்டுக்கு அங்கீகாரம் அளித்து ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. ஓராண்டு அனுமதி பெற்றிருந்த கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரிக்கும் ஐந்தாண்டுகளுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.ஆனால்,திருச்சி மருத்துவ கல்லூரிக்கான அங்கீகாரம் தொடர்பான அறிவிப்பு இதுவரை வரவில்லை.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More