தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், வரும் 12- ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.என்று தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More