Mnadu News

தமிழகத்தை பாராட்டி பேசிய மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியதாவது:- வரலாறு, கலாசாரம், இயற்கையில் சிறந்த தமிழகத்திற்கு முதலீடு செய்ய வந்துள்ளனர். முதலீடு செய்ய வந்துள்ள அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சியடைகிறேன். காஞ்சி பட்டுப்போல பல வண்ணங்களில் குவிந்திருக்கும் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சகோதரர் டி.ஆர்.பி.ராஜா இருவரையும் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். தமிழ்நாட்டை மாற்றியமைப்பதில் தைரியமான முடிவுகளை எடுக்கின்றனர். பிரதமர் மோடியின் இதயத்தில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு தனி இடம் உள்ளது.இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் செங்கோல், தமிழகத்தை சேர்ந்தது.

இந்தியாவின் பண்பாட்டிற்கு தமிழக கலாச்சாரம் அளித்து வரும் பங்கு மிகப்பெரியது.இந்தியாவின் கலாச்சார தொடர்புகளை பிரதிபலிக்கவே காசி சங்கமம் போன்ற நிகழ்வுகள். 2030ம் ஆண்டுக்குள் ‘1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்’ என்ற இலக்கை அடைய வாழ்த்துகிறேன். சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய ஆதித்யா எல்1 திட்டத்தின் இயக்குனர் நிகர் ஷாஜி தமிழ்நாட்டின் தென்காசி என்ற சிறிய நகரில் இருந்து வந்தவர். அவருக்கு எழுந்து நின்று பாராட்டை தெரிவிப்போம். நாட்டில் உள்ள பணி செய்யும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகின்றனர். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து, நாட்டின் பொருளாதார உயர்வில் பெண்கள் பங்களிப்பு உயர வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More