குமரி மாவட்டத்தை கேரளாவில் இருந்து பிரித்து தமிழகத்தோடு இணைத்து 66 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நவம்பர் 1 ம் தேதி குமரி மாவட்டம் பிறந்தநாளாக கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. மேலும் குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்க போராட்டம் நடத்தி உயிர்த்தியாகம் செய்த மார்சல் நேசமணி உள்ளிட்டவர்களை நினைவு கோரும் வகையில் நினைவு ஸ்தூபி புதுக்கடை சந்திப்பு மற்றும் மங்காடு பகுதியில் நிறுவப்பட்டு உள்ளது. அதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உட்பட காங்கிரஸ் கட்சியினர் ஸ்தூபிகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More