Mnadu News

தமிழகமெங்கும் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்.

கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை திறந்திருக்கும். இந்த நாள்களில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
சபரிமலை செல்லும் பக்தர்கள் பெரும்பாலானோர் கார்த்திகை 1ஆம் தேதி மாலை அணிந்து கொள்வார்கள். அதன்படி, தமிகமெங்கும் உள்ள ஐயப்பன், விநாயகர் கோயில்களில் கார்த்திகை முதல் நாளான இன்று அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
இந்தாண்டு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் வழக்கத்தைவிட 3 மடங்கு அதிகமானோர் மாலை அணிந்துகொண்டனர்.

Share this post with your friends