Mnadu News

தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல் முறையாக தமிழகம் வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.மதுரை மற்றும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார்.பிப்ரவரி 18-ஆம்; தேதி டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் காலை 11.50 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வரும் முர்மு, மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.பின்னர், ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பிப்ரவரி 19-ம் தேதி கோவையிலிருந்து மீண்டும் புறப்பட்டு முர்மு டெல்லி செல்கிறார். முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். தற்போது குடியரசுத் தலைவர் முர்மு மீனாட்சி அம்மன் கோயிலைத் தரிசிக்க உள்ளார்.முர்மு குடியரசுத் தலைவராகப் பதவியேற்று, மதுரைக்கு வருகைதருவது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends