Mnadu News

தமிழக துணை முதல்வர் இன்று காலை திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்

ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக  நேற்று மாலை திருப்பதி மலைக்கு வந்த ஓபிஎஸ் திருப்பதி மலையில் உள்ள விஐபி கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் இரவு தங்கி இன்று காலை கோவிலுக்கு சென்று  ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின் அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். தொடர்ந்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். முன்னதாக திருப்பதி மலையில் உள்ள வராகசாமி கோவில்,ஹயக்கிரீவர் கோவில் ஆகிய கோவில்களில் அவர் சாமி கும்பிட்டார்.

Share this post with your friends