தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக கடந்த 28ம் தேதி அன்று புறப்பட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சொல்லி 24 மீனவர்களையும் 5 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இது குறித்து உடனடியாக நமது மத்திய இணை அமைச்சர் முருகனுக்கும், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளின் விவரங்களை தெரிவித்து, நமது மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விரைந்து மீட்டு வர தமிழக பாஜ., வின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இலங்கையில் உள்ள நமது இந்திய தூதரக அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட 24 மீனவர்களை விடுவிக்கவும், சிறைபிடிக்கப்பட்ட 5 விசைப்படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அறிகின்றோம்.
சிறை பிடிக்கப்பட்ட நம் மீனவர்கள் தாயகம் திரும்ப துரித நடவடிக்கை எடுத்துவரும் நமது மத்திய இணை அமைச்சர் முருகனுக்கும், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கும் தமிழக பா.ஜ., சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக பா.ஜ., மீனவர் சமுதாய மக்களுக்கு என்றும் அரணாக இருக்கும். அதேபோல் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்குகாக பா.ஜ., கடின முயற்சி மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More