Mnadu News

தமிழக மீனவர்கள் கைது; பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பொங்கல் தினத்தன்று மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 28 பேரை சிங்களப்படையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழ் நாடு அரசு தீர்வு காண வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும். இதைக் கருத்தில் கொண்டு இந்த சிக்கலுக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை மற்றும் தமிழ்நாட்டு மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு முன்பாக இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 40 பேரையும், அவர்களின் படகுகளையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More