நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 5 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் விசைப்படகுடன் சிறை பிடித்துள்ளனர்.மேலும் கைதான 5 மீனவர்களும் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.