Mnadu News

தமிழறிஞர் நெடுஞ்செழியன் மறைவு:முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

தமிழறிஞரும், திராவிட இயக்க பேச்சாளருமான 79 வயதான நெடுஞ்செழியன் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். நெடுஞ்செழியன் உடல் சொந்த ஊரான திருச்சிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மறைந்த நெடுஞ்செழியன் உடலுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நெடுஞ்செழியன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவரகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நெடுஞ்செழியன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்மொழி அறிஞரும், தமிழின அரிமாவுமான நெடுஞ்செழியன் மறைவை அறிந்து மிகமிக வருத்தமடைகிறேன். நெடுஞ்செழியனின் அறிவு நூல்கள் தமிழ் சமுதாயத்தை எந்நாளும் உணர்ச்சியூட்ட செய்யும். தமிழ் மரபும். பெருமையும் காத்திடும் தமிழ் மான மறவர் என போற்றப்பட்டவர் நெடுஞ்செழியன். நெடுஞ்செழியனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More