Mnadu News

தமிழாசிரியர் பணி: டிச.20-க்குள் விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பல்கலை. வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணா பல்கலை.யில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பாடங்களை கற்பிக்க தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு சிறந்த கல்விப் பின்னணி மற்றும் கற்பித்தல் திறன் கொண்ட கல்வித் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பல்கலை. துறைகளில் 6 பணியிடங்களும், உறுப்புக் கல்லூரிகளில் 17 பணியிடங்களும் காலியாக உள்ளன. பி.ஏ., எம்.ஏ. ஆகியவற்றில் தமிழில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அல்லது அதற்கு இணையான கிரேடு அவசியம். ஸ்லெட், நெட், செட் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்விச் சான்றிதழ் நகல்களுடன் நேரடியாகவோ அல்லது ஸ்கேன் செய்து பிடிஎஃப் வடிவில் மின்னஞ்சல் மூலமாகவோ dirtamildvt@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரியிலோ டிச.20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அசல் விண்ணப்பம், இணைக்கப்பட்ட சான்றிதழ்களை ‘முனைவர் பா.உமா மகேஸ்வரி, இயக்குநர், பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் ( CPDE Building), அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 600025, தொலைபேசி எண்- 044-22358592, 22358593’ என்ற முகவரியில் அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கலாம்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More