Mnadu News

தமிழிசைக்கு முக்கியத்துவம்: இசையாளர்களுக்கு முதல் அமைச்சர் கோரிக்கை.

சென்னை மியூசிக் அகாதெமியில் இசை விழாவை நேற்று தொடக்கி வைத்து, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இசை விழாக்களின் மூலம் வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறோம் என்று மியூசிக் அகாதெமி தலைவர் முரளி கூறியிருக்கிறார். இந்தக் கருத்துதான் இன்று நாட்டுக்குத் தேவையான கொள்கை. இந்தக் கொள்கையை ஏதோ அரசியல் கட்சிகள் மட்டும் வலியுறுத்துவதாகச் சுருக்கி நினைத்துவிடக் கூடாது. இதுபோன்ற கலை அமைப்புகளின் கொள்கையாக – ஒவ்வொரு தனிமனிதரின் கொள்கையாக மாற வேண்டும்; எதிரொலிக்க வேண்டும்.
மியூசிக் அகாதெமி போன்ற இசைக் கலை அமைப்புகளும், மன்றங்களும் தமிழிசைக்கும், தமிழ்ப் பாடல்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். தமிழ் இலக்கியத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்கள் இருக்கின்றன. அந்தப் பாடல்களும் இதுபோன்ற இசை மன்றங்களில் தவறாது ஒலிக்க வேண்டும்.
பக்தி இசை, திரையிசை, மெல்லிசை, பாப், ராக் என எந்த இசையாக இருந்தாலும் – தமிழிசையாக இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். மொழி இருந்தால்தான் கலை இருக்கும். இசை வளர்த்தல் என்பது கலை வளர்த்தல் மட்டுமல்ல, தமிழ் வளர்த்தலும்தான். இதை மனதில் வைத்து அனைத்துக் கலைஞர்களும், அனைத்து கலை அமைப்புகளும் செயல்பட வேண்டும்.
நான் ஆட்சிப் பொறுப்பேற்று எந்தவித பிரச்னையில்லாமல், எந்தவித பரபரப்பும் இல்லாமல், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன் என்றால் அது இந்த இசை விழா நிகழ்ச்சிதான் என்றார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More