Mnadu News

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி: ஏ.கே.எஸ். விஜயன் மீண்டும் நியமனம்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மன்னார்குடியைச் சேர்ந்த ஏ.கே.எஸ். விஜயன், நாகப்பட்டினம் திமுக மாவட்டச் செயலராகவும் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். டந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் முதல் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்து வருகிறார்.தற்போது, ஜூன் 16 ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவதையொட்டி அவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

Share this post with your friends