தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாகவும் அதனை தடுக்க தவறியதாக தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழக முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி, தமிழக அரசை கண்டித்து சென்னை, மதுரை, சேலம், புதுக்கோட்டை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, செங்கோட்டையன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர். விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், கோவையில் எஸ்.பி.வேலுமணி, புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.