Mnadu News

தமிழ் தெரிந்த ஊழியர்கள் கட்டாயம்:பள்ளி டெண்டர் குழு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளுக்கு தனியார் நிறுவனங்களை அமர்த்த முடிவு செய்து, இதுதொடர்பாக டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் கோரி விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், 5 ஆயிரம் பணியாளர்களை கொண்டிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தன. இந்த நிபந்தனையை எதிர்த்து குவாலிட்டி ப்ராப்பர்ட்டி மேனேஜ்மெண்ட் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் தெரிவிக்கபட்ட விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், டெண்டர் நிபந்தனைகளை ரத்து செய்தும்,கிராமப்புற மாணவர்கள், பெற்றோரின் நலன் கருதி, தகவல் தொடர்புக்கு ஏதுவாக, பாதுகாவலர் பணிக்கும், தூய்மைப் பணியாளர் பணிக்கு தமிழ் தெரிந்தவரையே கட்டாயமாக நியமிக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்க டெண்டர் குழு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Share this post with your friends