குஜராத் மாநிலம், டங்காரா என்ற இடத்தில், 1824 பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி; பிறந்தவர் தயானந்த சரஸ்வதி சுவாமிகள்;. இயற்பெயர், மூல சங்கர். வீட்டிலேயே சமஸ்கிருதம், வேதம், புராணம் ஆகியவற்றை கற்றார்.ஆன்மிகத்தில் நாட்டம் பிறந்ததும் வீட்டில் இருந்து வெளியேறி, ஹரித்வார், கேதார்நாத் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று துறவியரிடம் சாஸ்திரங்கள், யோகங்களை கற்றார். சுவாமி விர்ஜானந்தரிடம் சீடராகச் சேர்ந்து, ‘தயானந்த சரஸ்வதி’யாக மாறினார்.கல்வியையும், ஞானத்தையும் மக்களுக்கு போதிக்க, ‘ஆரிய சமாஜம்’ என்ற அமைப்பை துவக்கினார். ஜாதி, மத வேறுபாடுகளை களைதல், மகளிருக்கு சம உரிமை, பெண் கல்வி, குழந்தை திருமணம் எதிர்ப்பு உள்ளிட்ட முற்போக்கு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார். மக்களிடையே தேசிய உணர்வையும் ஊட்டினார். 1883 அகடோபர் மாதம், 30ஆம் தேதி தன் 59வது வயதில் இறைவனடி சேர்ந்தார். இந்நிலையில், தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாள் விழாவை பிரதமர் மோடி டெல்லியில் துவக்கி வைத்தார்.பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி , பராம்பரியம், வளர்ச்சி ஆகிய இரண்டிலும் நாடு புதிய உயரங்களை எட்டியுள்ளது. தயானந்த சரஸ்வதியின் வாழ்க்கை அனுபவங்கள் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. உலகின் வளர்ச்சிக்காக நாம் பாடுபடுபவர்களாக இருக்க வேண்டும்.மகரிஷி தயானந்த சரஸ்வதி இந்தியாவின் பெண்களின் அதிகாரத்திற்காக குரல் கொடுத்தபோது, சமூக பாகுபாடு, தீண்டாமை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார். நாட்டில் பெண்களும் ரபேல் போர் விமானத்தில் இன்று பறக்கின்றனர். ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களை மேம்படுத்துவதே அரசின் முதன்மையான நோக்கம். என்று அவர் பேசினார்.

எம்.பி., தானாக தகுதியிழக்கும் சட்டத்தை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், ‘மோடி’ எனும் ஜாதியை குறித்து தவறாக பேசியதால்...
Read More