பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களின் மூலம் சமூக அவலங்களை சாட்டையடி திரைக்கதை மற்றும் வசனங்கள், பாடல்களோடு மக்கள் மத்தியில் கொண்டு வந்து சேர்பவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இந்த இரண்டு படங்களுமே வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். யுகபாரதி அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மாரி செல்வராஜ் இயக்கி தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியானது. படத்துக்கு “வாழை” என பெயரிடப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் யுகபாரதி அனைத்து பாடல்களையும் எழுதுகிறார். உதயநிதி ஸ்டாலின் படத்தை கிளப் செய்து துவக்கி வைத்துள்ளார்.