Mnadu News

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை: கமாண்டண்ட் தகவல்.

அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்துக்கு அருகில் நகரிகுப்பத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் தென்மண்டல படைத்தளம் உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், கேரளம், அந்தமான், ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் பேரிடர்களின்போது இந்த படைத்தளத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளுக்கு புறப்பட்டுச் செல்வர்.இந்நிலையில், இந்தப் படைத்தளத்தின் கமாண்டண்ட் அருண்தியோகம் தெரிவித்ததாவது:
,வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் சூழலில் தேசிய பேரிடர் மீட்புப்படை அதை எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளது. படையின் 15 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒரு குழு சென்னையிலும், ஒரு குழு நீலகிரி மாவட்டத்திலும், 13 குழுக்கள் அரக்கோணம் படைத்தளத்திலும் தயார் நிலையில் உள்ளன. இந்தக் குழுக்களுடன் மழை பாதிப்பின்போது பாதிக்கப்பட்டவர்களை மீட்க, இடிபாடுகளிடையே சிக்கியவர்களை மீட்க, தண்ணீரில் தத்தளிப்பவர்களை மீட்க அதிநவீன கருவிகள், சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களைஅகற்றுவதற்கான கருவிகள், தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் பாதிக்கப்பட்டோரை மீட்க படகுகள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு உதவ மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.
அதோடு;, வடகிழக்குப் பருவமழை பாதிப்புகள் குறித்து அறிய 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அரக்கோணம் படைத்தளத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார்.

Share this post with your friends