மனித உரிமைகள், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் பற்றிய முக்கிய பிரச்சினைகளை விவாதிப்பதற்காக தோகாவில் ஆப்கானிஸ்தான் தூதர்கள் நடத்திய கூட்டத்தில் ஐ.நா.பொதுச்செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் கலந்து கொண்டார். தலிபான்களுடன் எவ்வாறு பணியாற்றுவது என சர்வதேச சமூகத்திற்கு ஒரு பொதுவான புரிதலை ஏற்படுத்துவதற்காக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.இந்தச் சந்திப்பில் அண்டோனியாவிடம் செய்தியாளர்கள், “நீங்கள் தலிபான்களை சந்திப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அண்டோனியா குத்தரெஸ், “தலிபான்களுடன் நேரடையாக பேசுவதற்கும், சந்திப்பதற்கும் சரியான தருணமாக இருக்கும்போது, நான் வெளிப்படையாக அந்த வாய்ப்பை மறுக்க மாட்டேன். ஆனால், அவ்வாறு செய்ய தற்போதைய தருணம் சரியானதாக இல்லை” என்றார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More