பிரபல வசங்கர்த்தவும் இயக்குநருமான சுராஜ் இயக்ககத்தில் உருவாகி வருகிறது “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”. லைக்கா நிறுவன பிரம்மாண்ட தயாரிப்பில் வைகை புயல் வடிவேலு, ஆனந்தராஜ், ரெட்டின் கிங்ஸ்லி, சிவாங்கி, லொள்ளு சபா மாறன், சேஷு, ஷிவானி நாராயணன், கலக்கப்போவது யாரு பாலா, ராமர் போன்ற பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான “அப்பத்தா” பாடல் வைகை புயல் வடிவேலு குரலில் வைரல் ஹிட் அடித்த நிலையில், தற்போது படத்தின் செகன்ட் சிங்கிள் “பணக்காரன்” வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. விவேக் வரிகளில், வைகை புயல் வடிவேலு குரலில் தமிழ் ஆங்கிலம் கலந்த ஒரு பங்கீ பாடலாக அமைந்துள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாங் லிங்க்: https://youtu.be/zwK_fovQ7Co