தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் திடீரென அறிவித்தார். அத்துடன்; 15 பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்து அடுத்த தலைவரை தேர்வு செய்யவும் வலியுறுத்தியிருந்தார்.இது அவரது கட்சித் தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைவராக சரத் பவாரே தொடர வேண்டும் என்று கட்சியினர் பலரும் வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி கட்சித் தலைவர்களும் அவ்வாறே வலியுறுத்துகின்றனர். இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அதில், ‘சரத் பவார் பதவி விலகல் முடிவை ஏற்க முடியாது, கட்சியின் தலைவராக அவரே தொடர வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து எதிரொலி: விமானக் கட்டணங்கள் மூன்று மடங்கு உயர்வு.
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட மூன்று ரயில்கள்...
Read More