Mnadu News

தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவர் அறிவிப்பு: ஆதரவாளர்கள் போராட்டம்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக் கட்சியின் தலைவர் சரத்பவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.அதையடுத்து,அவரது ஆதரவாளர்கள் உடனடியாக முழக்கங்களை எழுப்பியதோடு, ராஜினாமாவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.அப்போது குறுக்கிட்டு பேசிய அவரது மகள் சுப்ரியா சுலே மற்றும் மருமகன் அஜித் பவார் ஆகியோர் அமைதியாக இருக்குமாறு ஆதரவாளர்களை வலியுறுத்தினர்.அதையடுத்து பேசிய அவர்,கட்சித் தலைவர் பதவியை தேர்வு செய்ய குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Share this post with your friends