தலைவர் 169 :
நெல்சன் இயக்கத்தில் ரஜினகாந்த் முதல் முறையாக பல மொழி சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்து ஆகஸ்ட் 10 அன்று திரை அரங்குகளில் உலகமெங்கும் வெளியாக உள்ளது “ஜெயிலர்”. இந்த படம் ரஜினி, நெல்சன் இருவருக்குமே கட்டாய வெற்றி படமாக அமைய வேண்டும் என இருவரும் உழைத்து வருகின்றனர். அனிருத் இந்த படத்துக்கு இசை அமைத்து வருகிறார்.
லால் சலாம் :
தனது மகள் மற்றும் இயக்குநருமான ஐஷ்வர்யா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்து வரும் படம் “லால் சலாம்”. மொய்தீன் பாய் ரோலில் சூப்பர் ஸ்டார் கிளாஸ் ரோலில் நடித்து வருகிறார். ரஹ்மான் இசையில் இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளது. ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
தலைவர் 170 :
ஜெய் பீம் படத்தின் மூலம் உலகமெங்கும் கவனம் ஈர்த்தவர் ஞானவேல். முதல் படைப்பிலேயே சமூகத்தின் மீது இவர் கொண்ட அக்கறை தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தது. இந்த படம் பல விருதுகளையும், பாராட்டுக்களையும் படக்குழுவுக்கு அள்ளிக் கொடுத்தது. இந்த படத்தை பார்த்த ரஜினி தனக்கு ஒரு கதை தயார் செய்யுமாறும், நேரம் எடுத்து பணியாற்றுங்கள் என கூறி உள்ளார். இந்த படம் நீதிமன்ற கதைக்களத்தில் வர உள்ளது தெரிய வந்துள்ளது.
தலைவர் 170 வில்லன் யார் :
இந்தப் படத்தின் ஒரு முக்கிய ரோலுக்காக நடிகர் விக்ரம்மை நடிக்க வைக்க லைக்கா உள்ளிட்ட படக்குழு ₹50 கோடி வரை தர தயாராக இருந்ததாகவும், ஆனால் அதை விக்ரம் மறுத்து விட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் இடம் இது குறித்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.