Mnadu News

தல 63 இயக்குனர் இவரா ? லிஸ்ட்டில் இணைந்த பிளாக் பஸ்டர் இயக்குனர்!

விஸ்வாஸம், வலிமை, துணிவு என தொடர் வெற்றிகளால் அஜித்தின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் ஸ்டோரி மற்றும் ஸ்கிரீன் பிளே போன்று எதிலும் இதுவரை கண்டு கொள்ளாமல் இருந்த அஜித் இந்த வெற்றி நிலைத்து நிற்க முழு ஸ்கிரிப்ட் ஐயும் படித்து விட்டு தான் முடிவு செய்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

ஆம், விக்னேஷ் சிவனின் கதையை பார்த்து விட்டு தான் அவரை ஒதுக்கி விட்டு மகிழ் திருமேனியை தேர்வு செய்துள்ளாராம். விடாமுயற்சி ஒரு பரபரப்பான திரில்லர் படமாக உருவாக உள்ளது என்கிற தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த படத்தை அஜித் பெரிதும் எதிர்பார்த்து உள்ளார்.

விடாமுயற்சியை பொங்கல் பண்டிகைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு உள்ளார்களாம். இதறக்கிடையில், அனிருத் படத்தின் பாடல் பணிகளை துவங்கி விட்டதாக தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், அஜித் தமது அடுத்த பட இயக்குனர் யார் என தேர்வு செய்துள்ள பட்டியலில் நெல்சன் திலீப் குமாரும் இணைந்துள்ளார் என்பது தான் லேடஸ்ட் நியூஸ். ஆம், அஜித் 63 படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார் என்பது உறுதி ஆகி இருந்த நிலையில், சன் பிக்சர்ஸ் வேறு மாதிரி ஒரு பிளான் வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆம், ஜெயிலர் தந்துள்ள வெற்றி தான் நெல்சன் அவர்களுக்கு மார்க்கெட்டை உயர்த்தி உள்ளது என்கிறார்கள். மேலும், நெல்சனுக்கு இந்த படதுக்காக 20 கோடிகள் வரை சம்பளம் தர தயாராக உள்ளார்கள் எனவும் கூறப்படுகிறது.

விஷ்ணு வரதன், சிறுத்தை சிவா, நெல்சன் என பல இயக்குநர்கள் பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில், தீபாவளி அன்று ஒரு மாஸ் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நெல்சன் முன்னர் எடுத்த படங்களின் பார்ட் 2 வா அல்லது அஜித்தை வைத்து ஒரு புதிய கதைக்களம் அமைக்கப்படுமா போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

Share this post with your friends