Mnadu News

தல 63 “சிட்டிசன் 2” வா? ஸ்கிரிப்ட் ரெடி! இயக்குநர் பளிச்!

சரவண சுப்பையா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியானது “சிட்டிசன்” திரைப்படம். நடிகர் அஜித் திரை வாழ்வில் மிக முக்கியமான திரைப்படம் இது என்று சொல்லலாம். அஜித் பல தோற்றங்களில் வந்து கலக்கி இருப்பார். இப்படம் மாபெரும் வசூலையும் அஜித்துக்கு நல்ல பெயரையும் பெற்று தந்தது.

மீனா, பாண்டியன், நக்மா, நிழல்கள் ரவி என அனைத்து நடிகர்களும் நடிப்பில் கலக்கி இருந்தனர். தேவா இசையில், வைரமுத்து எழுதிய அனைத்து பாடல்களும் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த படம் தான் அஜித் பின் நாட்களில் பல கெட்டப் போட்டு பல படங்களில் கலக்க காரணமாக இருந்தது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரெடியாக உள்ளதாக ஒரு நேர்காணலில் இயக்குநர் சரவண சுப்பையா கூறி உள்ளார். அஜித் ஓகே சொன்னால் போதும் என கூறி உள்ளார். நிச்சயம் அஜித் இதற்கு ஓகே சொல்ல வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. இது அஜித் 63 அல்லது 64 ஆக கூட இருக்கலாம்.

Share this post with your friends