ஹெச் வினோத், போனி கபூர் கூட்டணியில் அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் “துணிவு”.
தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்கு பிறகு ஜிப்ரான் இரண்டாவது முறை ஹெச் வினோத் உடன் இணைந்துள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஃபர்ஸ்ட் சிங்கிள் அல்லது டீஸர் விரைவில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
இதற்கு அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். அனிருத் இந்த படத்துக்கு இசை அமைகிறார்.
அஜித்தின் 63 படத்துக்கு இயக்குனர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், தற்போது அது சிறுத்தை சிவா தான் என தகவல்கள் பரவி வருகின்றது. அதே போல சன் பிக்சர்ஸ் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்துக்கு அனிருத் அல்லது டி இமான் இசை அமைக்க வாய்ப்புகள் அதிகம் என தகவல் கசிந்துள்ளது. அடுத்த வருட துவக்கத்தில் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.