மாஸ்டர் பிளாக் பஸ்டர்:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது. லோகேஷ் பணியாற்றிய விதம் விஜய்க்கு பிடித்து போகவே மீண்டும் ஒரு படம் பண்ணலாம் என அப்போதே கூறி இருந்தார்.

பீஸ்ட், வாரிசுக்கு பிறகு மீண்டும் கூட்டணி:
பீஸ்ட், வாரிசு படங்களுக்கு பிறகு லோகேஷ் உடன் கூட்டணி அமைப்பது என விஜய் உறுதியாக இருந்தார். இந்த தகவல் கசியவே ரசிகர்கள் எப்போது அப்டேட்ஸ் வரும் என ஆவலோடு லோகேஷ் ஐ கேட்டு வந்தனர்.

படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்:
யாரும் எதிர்பாராத விதமாக நேற்று மாலை விஜய் 67 குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகம் அடைய செய்தது. மாஸ்டர் படத்தில் பணியாற்றிய அதே கூட்டணி இதிலும் பணியாற்ற உள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
