லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படம் “விஜய் 67”. தற்போது, வாரிசு திரைப்படம் அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், விஜய் 67 குறித்த அடுத்தடுத்த தகவல்கள் கசிய துவங்கி உள்ளன.

அப்படி, சமீபத்தில் ஒரு நேர்காணலில் மனம் திறந்த நடிகர் விஷால், விஜய் 67 படத்தில் வந்த வில்லன் வாய்ப்பை நான் நிராகரித்தது உண்மை தான் என்றும், மூன்று படங்களை அடுத்தடுத்து முடிக்க வேண்டி உள்ளதால் இந்த கடினமான முடிவை எடுத்து உள்ளதாகவும் கூறி உள்ளார்.

துப்பறிவாளன் 2 பற்றி பேசிய விஷால் இயக்குநர் மிஷ்கின் என்னை ஏமாற்றி விட்டார் சரியாக ஷூட்டிங் நடத்தவில்லை என அதிரடியாக கூறி உள்ளார்.

அதனால் நானே படத்தை இயக்க முடிவு செய்து அடுத்த வருட பிப்ரவரி முதல் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கும் என தெரிவித்து உள்ளார்.
