வாரிசு படம் நிறைவு கட்டத்தை எட்டி வரும் நிலையில் விஜய் தற்போது சுற்றுலா சென்றுள்ளார். அடுத்த மாதம் முதல் வாரிசு படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் மாதம் முதல் விஜய் 67 பட ஷூட்டிங் துவங்க உள்ளது உறுதி ஆகியுள்ளது. இதற்கான முன் கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்துக்கும் அனிருத் தான் இசை அமைக்க உள்ளார்.

இந்த படத்தில் யார் ஹீரோயினாக நடிக்க போகிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது. அது நயன்தாராவா அல்லது திரிஷாவா என தகவல் பரவி வந்த நிலையில் அது திரிஷா என்று சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல தல 62 படத்திலும் திரிஷா தான் ஹீரோயின் எனவும் சொல்லப்படுகிறது. இந்த இரு படங்களுக்கும் திரிஷாவின் சம்பளம் 15 கோடிகளுக்கு மேல் எனவும் சொல்லப்படுகிறது.
