Mnadu News

தாம்பரம் – எர்ணாகுளம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்.

மதுரை தாம்பரம்- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயிலை இயக்குவது என்று தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி எர்ணா குளத்தில் இருந்து வருகிற 28-ஆம்; தேதி முதல் ஜனவரி மாதம் 2-ஆம் தேதி வரை திங்கட்கிழமைகளில் மதியம் 1.10 மணிக்கு புறப்படும் ரயில், அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு தாம்பரம் செல்லும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து வருகிற 29- ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 3- ஆம் தேதி வரை செவ்வாய்க் கிழமைகளில் மாலை 3.40 மணிக்கு புறப்படும் ரயில், அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் செல்லும். இந்த ரயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயன்குளம், கரு நாகப்பள்ளி, சாஸ்தான் கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவணேஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும். மேற்கண்ட எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

Share this post with your friends