Mnadu News

தாம்பரம்- நெல்லை வாராந்திர ரயில்: மீண்டும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை.

நெல்லை-தாம்பரம் இடையே கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 5 மாதங்கள் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லை – தாம்பரம் இடையேயும், திங்கட்கிழமை தோறும் தாம்பரம் – நெல்லை இடையேயும் இந்த ரயில் இயங்கியது. இந்த ரயில்கள் நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டன. இந்த வாராந்திர சிறப்பு ரயில்களுக்கு பயணிகளிடையே சிறப்பான வரவேற்பு இருந்தது. ஆனால் ஜனவரி மாதத்துடன் இந்த வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் 5 மாதங்கள் இயக்கப்பட்ட இந்த சிறப்பு ரயில்கள் மூலம் கிடைத்த வருமானம் மற்றும் அதில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை குறித்து ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு தெற்கு ரயில்வே அளித்துள்ள பதிலில், “5 மாதங்களில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்ட இந்த இரு வாராந்திர சிறப்பு ரெயில்களிலும் சேர்த்து மொத்தம் 33 ஆயிரத்து 517 பேர் பயணம் செய்து உள்ளனர். இவர்களின் மூலம் சுமார் ரூ.2.14 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக” கூறப்பட்டு இருந்தது. நெல்லையில் காலியாக நிறுத்தி வைக்கப்படும் ரயில் பெட்டிகளை கொண்டு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இவற்றின் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதால் இந்த வாராந்திர சிறப்பு ரயில்களை மீண்டும் நிரந்தரமாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பாண்டியராஜா கூறும்போது, “பயணிகளிடையே இந்த வாராந்திர சிறப்பு ரயில்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தட்கல் கட்டணத்தில் இயக்கப்படுவதால் ரயில்வேக்கும் கணிசமான வருமானம் கிடைக்கிறது. எனவே நிறுத்தப்பட்ட இந்த வாராந்திர சிறப்பு ரெயில்களை மீண்டும் நிரந்தரமாக இயக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More