தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தில்லையம்பூர் பகுதியில்; 80 வயதான கோவிந்தராஜ்,73 வயதான லட்சுமி தம்பதிகளின்; மூத்த மகனும், திருமணமான மகளும் இறந்து விட்டனர். இந்த நிலையில், 45 வயதான இளைய மகன் ராஜேந்திரன், மட்டும்; தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.; திருமணம் ஆகாத மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. அதனால், அடிக்கடி தாய் – தந்தையுடன் ராஜேந்திரன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த ராஜேந்திரன் தாய் தந்தையை வீட்டிலிருந்த அரிவாளால் எடுத்து தலை கழுத்து கை உள்ளிட்ட இடங்களில் வெட்டி கொலை செய்துள்ளார். இருவரும் உயிரிழந்த நிலையில், அவர்களின் சடலத்துடன் இரண்டு நாட்கள் சாப்பிட்டு சர்வ சாதாரணமாக இருந்துள்ளார்.
அதோடு கொலை நடந்த இந்த இரண்டு நாட்களும் காலை எழுந்து, வெளியே சென்று குளித்து விட்டு வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே அக்கம் பக்கத்தினர் உடனடியாக பட்டீஸ்வரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் பார்த்தபோது. தாய், தந்தை இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, தாய்- தந்தையை கொலை செய்த மகன் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களும் தடைய அறிவியல் துறையினரும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More