கேரள மாநிலம் திருச்சூரில் வட மாநிலத்தைச் சேர்ந்த சில நபர்கள் ஏ.டி.எம்மில் பணத்தை கொள்ளையடித்துவிட்டு ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் தப்பிச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் அந்த கண்டெய்னர் லாரி நிற்காமல் சென்றுள்ளது.இதனை தொடர்ந்து போலீசார் வாகனத்தை விரட்டி பிடித்து லாரிக்குள் இருந்த பணம் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.மேலும் லாரியில் இருந்தவர்களையும் கைது செய்த நிலையில் ஒருவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது போலீசார் சுட்டதில் அவர் உயிழந்தார்