விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம், பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றியம், 9 வது வார்டு கிழக்கு காலனியில் சுமார் 500 குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சாலையை திண்டிவனம் மரக்காணம் ஆகிய ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்குவதால் முற்றிலுமாக வாகனங்கள் செல்ல முடியாமல் சேரும் சகதியும் ஆக இருந்தது வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மரக்காணம் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடமும், பிரம்மதேசம் ஊராட்சி மன்ற தலைவரிடமும் சாலையை அமைக்க கோரிக்கை வைத்தனர். பல ஆண்டுகளாக இந்த கோரிக்கையை நிறைவேற்றப்படாத நிலையில் இன்று திண்டிவனம் மரக்காணம் சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட முயன்ற நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More