Mnadu News

திண்டிவனத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் முஸ்லிம்கள் இன்றும் நாளையும் இரண்டு நாள் மாநாடு இஸ்திமா நடைபெறுகிறது. இந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள், சப் இன்ஸ்பெக்டர்ஸ் ரவிச்சந்திரன், பார்த்தசாரதி, வெங்கடேசன்,தலைமையான வெடிகுண்டு நிபுணர்கள் மாநாடு நடக்கும் இடங்களில் மோப்பநாய் ராணி வர வைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை நடத்தினர். இதேபோல திண்டிவனம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மூலமாக தீவிர சோதனை நடத்தினர். இந்த திடீர் சோதனையால் திண்டிவனத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Share this post with your friends