Mnadu News

நீதிமன்ற ஊழியர்களை கண்ட மின்வாரிய அலுவலர்கள் ஓட்டம்..!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதுகாப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் .இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வீட்டில் உள்ள தொலைக்காட்சி பெட்டியை நிறுத்த முயன்ற போது உயர் மின் அழுத்த மின்சாரம் தாக்கி குமார் சம்பவ இடத்திலே பலியானார். இது குறித்து திண்டிவனம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த மின்வாரிய அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் வீடூரில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றபோது அலுவலகத்தில் இருந்து அவசர அவசரமாக மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் வெளியேறிய சம்பவம் இப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More