நவம்பர் மாதம் இரண்டாம் தேதி கிறிஸ்தவ பெருமக்களால் கல்லறை திருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். அதனைத்தொடர்ந்து இன்று திண்டுக்கல் சவேரியப்பன் கல்லறைத் தோட்டத்தில் திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தங்களது குடும்பத்தில் இறந்தவர்களின் கல்லறையை சுத்தம் செய்து அதனை வண்ண மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரித்து நினைவுகூர்ந்தனர். மேலும் இறந்தவர்களை நினைவில் கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவ பெருமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.