Mnadu News

திமிங்கல எச்சம் கடத்திய மூவர் கைது..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடி புதுமனை சாலையில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு வந்த காரை மறித்து சோதனை செய்ததில் காரில் மூன்று நெகிழிப்பையில் திமிங்கலத்தின் எச்சம் என்று அழைக்கப்படும் அம்பர்கிரிஷ் இருப்பது தெரியவந்தது. அதனைதொடர்ந்த்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அருள்ஆல்வின், பெனிஸ்டோ, வேலு கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரை பிடித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 11 கிலோ எடை கொண்ட இந்த அம்பர்கிரீஷின் மதிப்பு சுமார் 11 கோடி என்றும் இதனை வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்த கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Share this post with your friends