மாவட்ட செயலாளர் கூட்டம் குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டக் கழகச் செயலாளர்களும், பிற மாநிலக் கழகச் செயலாளர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், திமுக அரசின் பல்வேறு மக்கள் விரோதச் செயல்களை பட்டிதொட்டியெங்கும் வாழும் மக்களிடம் எடுத்துரைப்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசனை வழங்கினார்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஜார்கண்ட்டில் வீடு மீது மோதிய சிறிய ரக விமானம்:பதைபதைக்கும் காட்சிகள்.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில், ஒரு வீட்டின் சுவர் மீது சிறிய ரக விமானம்...
Read More